அஞ்சுகிராமம் ஜன-9
அஞ்சு கிராமத்திலிருந்து சபரிமலைக்கு பெருவழி புனித யாத்திரை செல்லும் அஞ்சுகிராமம் மேட்டுக்குடியிருப்பு ஊரை சார்ந்த பாண்டியன் (வயது 76) குருசாமி-க்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளன. அஞ்சு கிராமம் மேட்டு குடியிருப்பு ஊரை சார்ந்த பண்டாரக்குட்டி மகன் பாண்டியன் கார் டிரைவராக தொழில் செய்து வருகிறார். இவர் 1975 ஆம் ஆண்டு முதல் முதலாக சபரிமலை ஐயப்பன் சாமிக்கு இருமுடி கட்டி, நாகர்கோவில் ஐயப்ப சாமி குழுவினருடன் கன்னி மாலை அணிந்து சபரிமலைக்கு சென்று திரும்பினார். அதன்பின்னர் தொடர்ச்சியாக 50 ஆண்டுகள் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று வருகிறார்.கடந்த 1993லிருந்து குரு சாமியாக காணிமடம், அஞ்சு கிராமம், புதுமனை இந்திரா நகர்,ஜெய மாதாபுரம், மகாராஜபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து சபரி மலைக்கு பக்தர்கள் செல்ல குழு அமைத்து செயல்பட்டு வருகிறார். சபரிமலைக்கு தொடர்ந்து ஐம்பதாவது முறையாக மாலை அணிவித்து புனித பயணம் மேற்கொள்ளும் பாண்டியனுக்கு பெருவழி சபரி புனித யாத்திரை குழுவினர் நகரின் முக்கிய பகுதிகளில் கட்அவுட்டுகள் வைத்து புகழ் சேர்த்து உள்ளனர்.