தஞ்சாவூர் ஜூன் 4
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை க்கு 204 பணியாளர்கள் நியமனம்.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி க்கு குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது .இதற் காக அங்கு பல்வேறு முன்னேற்பா டுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் பணிக்கு மொத்தம் 204 பேர் நியமிக்கப்பட் டுள்ளனர், .ஒவ்வொரு சட்டப்பேர வை தொகுதிக்கும் 14 மேஜை போடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக திருவையாறு சட்டப்பேரவை தொகுதிக்கு 23 சுற்றுகளும், தஞ்சாவூர், மன்னார்குடி ,ஒரத்தநாடு ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளு க்கு தலா 21 சுற்றுகளும், பட்டுக் கோட்டை தொகுதிக்கு 20 சுற்றுகளு ம் குறைந்தபட்சமாக ,பேராவூரணி தொகுதிக்கு 19 சுற்றுச்சூழலும் வாக்கு எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் கடைசி சுற்றுகளில் மேஜைகளின் எண்ணிக்கை குறைந்துவிடும்.
இப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கணினி மூலமாக மே 27ஆம் தேதி முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து கணினி மூலம் இரண்டாவது கட்ட தேர்வு நடைபெற்றது .மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்திலும் சுற்று பகுதிகளிலும் ஏறத்தாழ 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்:
இந்நிலையில் வாக்கு எண்ணிக் கை மையத்தில் மேற்கொள்ளப் பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வை யாளர் ஒய் கி கேட்டோ சேம ,மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் ஆகியோர் ஆய்வு செய்தனர்
அப்போது வாக்கு எண்ணிக்கைக் காக அமைக்கப்பட்டுள்ள மேஜை கள், தடுப்புகள், சுற்று விவரங்க ளில் அறிவிக்கும் பதாகைகள், ஊடக அறை,கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர் அப்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்