ஈரோடு ஆக.19
ரூ 1916.41 கோடி மதிப்பில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினை முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்
இதன் பிறகு அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது
அத்திக்கடவு அவிநாசி திட்டமானது பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரி நீரை வினாடிக்கு 250 கன அடி வீதம் 70 நாட்களுக்கு நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 நீர்வளத்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் என மொத்தம் 1045 குளம், குட்டைகள் நீர் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது ரூ.1916.417 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு. குடிநீர் தேவைகள் பூர்த்தியாகும். பம்பிங் ஸ்டேசன் 1-ல் இருந்து, 3 வரை இதற்கு இடைப்பட்ட இடத்தில் பெரிய பைப்லைன் அமைப்பதற்கு, நிலம் கையகப்படுத்தப்படாமல் இருந்தது அந்த நிலத்தினை கையகப்படுத்தி, அங்கு
குழாய் பதிக்க வில்லை என்றால் எந்த திட்டமும், எந்த பயனும் பெறாது. எனவே அந்த அடிப்படை பணியினை மேற்கொள்வது தொடர்பாக
விவசாயிகளிடம் நிலைமையை எடுத்துக்கூறி, விரைவாக அந்த பணிகளை துவக்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது
இதனை தொடர்ந்து, விசாயிகளிடம் நேரடியாக பேசி நிலம் கையகப்படுத்தப்பட்டது.
நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இன்னும் சில நாட்களில் இழப்பீடு வழங்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.