திருப்பத்தூர்:டிச:31,
தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்க துவக்க நிகழ்வினை துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வரவேற்று, இந்தத் திட்ட நிகழ்வின் தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 614 மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி , ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் கலந்துக்கொண்டு, வங்கி பற்று அட்டைகளை வழங்கி சிறப்பித்தனர்.
உயர் கல்வி பயிலும் அரசு /அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளின் சேர்க்கை விகிதம் மிக குறைவாக இருப்பதை உணர்ந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதிப்படுத்தும், புதுமைப்பெண் திட்டமானது 2022 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு/ பட்டயப் படிப்பு/ தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வீதம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இதில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 30 கல்லூரிகளில் பயிலும் 2710 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதியதாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இத்திட்டமானது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், நமது மாவட்டத்தில் 614 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3,324 மாணவிகள் பயனடைய உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சுமதி, திருப்பத்தூர் நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், ஒன்றியக்குழு தலைவர்கள் விஜயா, திருமதி சங்கீதா, திருமதி.திருமதி திருமுருகன்,நகர மன்ற துணைத்தலைவர் சபியுல்லா, உள்ளாட்சி பிரதிநிகள், கல்லூரி ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.