நாகர்கோவில் மே 29
குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏழை எளியவருக்கு உணவு வழங்கப்பட்டது. தமிழக வெற்றி கழக
தலைவர் விஜயின் உத்தரவின்படி கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் ஆலோசனை மற்றும் வழிக்காட்டுதலின் படி கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளர் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் சிவா தலைமையில் கன்னியாகுமரி மாவட்ட தலைமை மற்றும் அனைத்து அணி தலைவர்களின் முன்னிலையில் பொதுமக்களுக்கு நாகர்கோவில் தொகுதி வடசேரி பகுதியில் 200 பேருக்கும், கன்னியாகுமரி தொகுதியில் கன்னியாகுமரி பகுதியில் 100 பேருக்கும், அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட தலைமை, இளைஞரணி, விவசாய அணி, இலக்கிய அணி, தொண்டரணி, மாணவரணி மற்றும் கன்னியாகுமரி பேரூர் ஆகிய அணிகள் இதில் பங்குகொண்டார்.