பல்லடம் நவ.10
தீபாவளி பண்டிகைக்கு தயாரிக்கப்பட்டு காலாவதியான இனிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறையினர் அறிவுறுத்தினர்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்தவராஜ் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர். விஜயலலிதா ம்பிகை தலைமையில்
தீபாவளி பண்டிகைக்கு தயாரித்த காலாவதியான இனிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த உணவகம், பேக்கரி கடைகள், உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு அறிவுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பல்லடம் வட்டாரப் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு மேற்கொண்டு காலாவதியான இனிப்புகளை அப்புறப்படுத்த அறிவுறுத்தினார். இது குறித்து அவர் கூறியதாவது பல்லடம் பகுதியில் செயல்பட்டு வரும் இனிப்பு காரம் தயாரித்து விற்பனை செய்யும் பலகார கடைகள் உணவு பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளில் தீபாவளி பண்டிகைக்கு தயார் செய்த அனைத்து வகையான காலாவதியான இனிப்பு காரம் உள்ளிட்ட அனைத்து தின்பண்டங்கள் உணவுப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் காலாவதியான இனிப்பு கார வகைகள் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யக் கூடாது.
கடும் நடவடிக்கை
கிராமப்புறங்களில் உள்ள இனிப்பு காரம் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை கடைகளில் கடந்த வாரத்தில் தயாரிக்கப்பட்டு கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டதில் காலாவதியான பலகாரங்களை உடனே
அகற்ற வேண்டும் என காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் மீறி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அபதாரம் விதித்தல், கடையை சீல் வைத்தல், கடை உரிமம் ரத்து செய்தல் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.