திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர்:டிச:18, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையில் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப., கொடி அசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.நாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.சாந்தி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.