கன்னியாகுமரி, ஜூலை. 13
கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பகுப்பாய்வு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கு நிகழ்வுக்கு புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பிரசன்னா தலைமை வகித்தார். நுகர்வோர் பாதுகாப்பு வாய்ஸ் கன்னியாகுமரி அமைப்பின் செயலர் மெல்கியாஸ் பொருளாளர் சின்னமுட்டம் ஜெயசிறில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அகஸ்தீசுவரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தி முருகன் உணவுப் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களிடையே விளக்கவுரையாற்றினார். அனைத்துவகை உணவுப் பொருள்களின் பகுப்பாய்வு குறித்து பாளையங்கோட்டை உணவுப் பகுப்பாய்வு அலுவலர் கணேஷ்ராம் சிறப்புரையாற்றினார். மாநில நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய தலைவர் சுப்பிரமணியம் உணவுப் பொருள்களின் தரம் குறித்து உரையாற்றினார். இறுதியாக
புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஷகிலா நன்றி கூறினார்.