நாகர்கோவில் ஜூன் 24
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம்,
புத்தன் துறையில் இருந்து வேளாங்கண்ணி கோவில் நோக்கி நடை பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க கழக செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான
தளவாய்சுந்தரம் ஏற்பாட்டில் தோவாளை தெற்கு ஒன்றிய கழக செயலாளரும், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவருமான முத்துக்குமார் தலைமையில் காலை, மதிய உணவை ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தேவாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட கழக இணை செயலாளரும்,தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவருமாகிய
சாந்தினிபகவதியப்பன் ,குமரி மேற்கு மாவட்ட கழக மீனவரணி செயலாளர் ஜோஸ் , ஆரல்வாய்மொழி பேரூராட்சி கவுன்சிலர்கள்
ஜெனட்சதீஷ்குமார், மணி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.