பொள்ளாச்சி அக்: 10
பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கும் மருத்துவமனையில் பயிற்சி பெறும் செவிலியர், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும் ஒரு உணவு சார்ந்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த விழாவில் பொள்ளாச்சி நகராட்சியின் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். விழாவில் உணவு விழிப்புணர்வு கொடுத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா , மருத்துவ அலுவலர் டாக்டர் அர்ச்சனா, பொது மருத்துவர் டாக்டர் வனஜா, விளக்கமாக எடுத்துக் கூறினார்கள்.
தற்போது உடல் உழைப்பு அதிகமாக இல்லாத காரணத்தினாலும், துரித உணவுகள் அதிகமாக சாப்பிடுவதாலும், இனிப்புகள் பேக்கரி உணவுகள் அதிகமாக சாப்பிடுவதாலும் உடல் பருமன் அதிகரித்து ரத்த கொழுப்பு அளவு அதிகரித்து சர்க்கரை நோய் ,உயர் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளால் குறைந்த வயதில் கூட பாதிக்கப்படுகின்றனர் அவர்கள் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்ன உடற்பயிற்சி செய்ய வேண்டும் ,என்பது குறித்து விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது. உணவு விழிப்புணர்வு குறித்து ஒரு கண்காட்சியும், யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது.
கீரை ,காய்கறிகளை அதிகமாக உட்கொள்வது தானியங்கள் ,பழங்கள் , முட்டை, மாமிசம் சாப்பிடுவது தினமும் தண்ணீர் இரண்டு முதல் மூன்று லிட்டர் அளவு குடிக்க வேண்டும் தினமும் 7 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும் வெயில் நேரத்தில் தோலில் வெயில் படும்படி சிறிது நேரம் இருக்க வேண்டும் என்பது விளக்கிக் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.