மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து திருமங்கலத்தில் ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு பாஜகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பிரதமர் மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக நேற்று பதவியேற்று கொண்டார். இதை நாடு முழுக்க உள்ள பா.ஜ., வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் தேவர் சிலை முன்பு ஆன்மீக மற்றும் ஆலயமேம்பாட்டு பிரிவு பா.ஜ., வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண் டாடினர். இந்நிகழ்ச்சியில் பொருளாதாரப் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் நிரஞ்சன் ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மதுரை மேற்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து மாவட்டச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன் குணசேகரன் சிற்பி முருகேசன் கண்ணன்
மண்டல தலைவர்கள் முருகேசன்,மஞ்சுளா திருமங்கலம் நகர நிர்வாகிகள் காமராஜ் தெற்கு மண்டல பொதுச் செயலாளர் பாண்டீஸ்வரி நிர்வாகிகள் தங்கச்சாமி சக்திவேல் மூவேந்தரன் தொழில் பிரிவு மாவட்ட தலைவர் குருசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.