மதுரை நவம்பர் 29,
மதுரை மேலமடை பகுதியில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து போக்குவரத்து துணை ஆணையர் வனிதா தலைமையில் போக்குவரத்து கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார், போக்குவரத்து உதவி ஆணையர்கள் இளமாறன், செல்வின் முன்னிலையில் மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபனா மற்றும் கோமதிபுரம் பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.