காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராவத்தநல்லூர் ஊராட்சியில் டாக்டர் அம்பேத்கர் 134 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு உத்திரமேரூர் கிழக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் எஸ்.பி.கே. தென்னரசு வழிகாட்டுதலின்படி, கிளை நிர்வாகி எம்.ஜி.பச்சையப்பன் ஏற்பாட்டில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் விழா மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக த.வெ.க கட்சியின் உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.ஆர்.ரஞ்சித்குமார் கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய நிர்வாகிகள், மாரிமுத்து, மணிவண்ணன்,ராமு, குணால் உள்ளிட்ட த.வெ.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.