டிச. 18
திருப்பூர்,சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்டசார்பாக விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு, கல்லூரியில் உள்ள குமரன் அரங்கில் இராணுவ வீரர்களின் புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் மரியாதை செய்தனர். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், 1971 ஆம் ஆண்டு வங்க தேச விடுதலை போரை ஆதரித்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய இராணுவம் போர் தொடுத்தது. டிசம்பர் 16 ல் பாகிஸ்தான் படையினர் இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள முடியாமல் சரணடைந்தனர். இந்த வெற்றி தினத்தை அனுசரிக்கும் வகையில் ஆண்டுதோறும் விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது. அப்போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. கடும்குளிரிலும் இந்திய நாட்டை பாதுகாப்பதற்காக போராடிய இராணுவ வீரர்களை மதிக்க வேண்டும் என்று கூறினார்.
பிறகு, மாணவ செயலர்கள் மதுகார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, செர்லின், ரேவதி, நவீன்குமார், விஸ்வபாரதி, கவியரசு, திவாகர் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகள் இராணுவ வீரர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவியும், அஞ்சலி செலுத்தியும் மரியாதை செலுத்தினர்.