மதுரை ஆகஸ்ட் 28,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 30ம் தேதி கொடியேற்றம்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வரும் 30 ம்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கவுள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மாதம் தோறும் திருவிழா, நாள்தோறும் கொண்டாட்டம் என்பது வழக்கமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
அதனடிப்படையில் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல பெருவிழா கொடியேற்றம் வரும் 30. 08. 24 வெள்ளிக்கிழமை காலை 9:30 மணி முதல் 10: 30 மணிக்குள் (09:55 முதல் 10: 19 மணிக்குள்) துலா லக்கினத்தில் ஆவணி மூல திருவிழா தொடங்குகிறது.