நாகர்கோவில் ஜூன் 16
60 நாட்கள் தடைக்காலம் முடிந்து அதிகாலையிலேயே கடலுக்குக் கிளம்பிய விசைப்படகு மீனவர்கள்
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 60 நாட்கள் விசைப்படகுகள் கடலில் மீன் பிடிக்க தடையானது அமலில் இருந்து வருகிறது.
இந்த ஆண்டிற்கான மீன்பிடித்தலை காலம் நேற்று நள்ளிரவு முடிவற்ற நிலையில் கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள 350 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று அதிகாலையிலேயே கடலுக்கு மீன் பிடிக்க சென்றன.
கன்னியாகுமரி சின்னமட்டம் மீன்பிடி துறைமுகத்தை பொருத்தவரை 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் நேரடியாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும் மீன்பிடி தொழிற்சார்த்த சுமார் 20000 மேற்பட்ட தொழிலாளர்களும் பயன் அடைந்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக தொழில் இல்லாமல் முடங்கி வந்த இந்த தொழிலாளர்கள் இந்து முதல் தங்களது வாழ்வாதாரம் பெருகும் எனவும் இந்த ஆண்டு அதிக அளவிலான மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.