நாகர்கோவில் ஜூன் 29
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது .. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைப்பெற்ற இந்த கூட்டத்தில் மீன் வளத்துறை அதிகாரிகள். மாவட்டம் முழுவதும் இருந்து மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கடல் சீற்றத்தால் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன . கடல் அரிப்பால் வீடுகள் மீன்பிடி உபகரணங்கள், சேதமடைவதோடு, மீனவர்கள் உயிர் பலியாகி வருகின்றனர் . இதே போன்று மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் படகுகள் உள்ளன ஆனால் 3 ஆயிரம் படகுகளுக்கு மட்டுமே மானியத்தில் மண்ணெண்ணய் வழங்கப்படுகிறது படகே இல்லாதவர்களிடம் பணத்தை லஞ்சமாக பெற்று கொண்டு மானியத்தில் மண்ணென்ணெய் அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள் இது தொடர்பாக ஒன்றரை ஆண்டுகளாக மீனவர் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மீனவர் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து மீனவ அமைப்புகள் வெளிநடப்பு செய்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது . மேலும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் அடுத்த மாதம் மீனவர்களை திரட்டி போட்டி மீவை குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடத்துவோம் என மீனவ அமைப்புகள் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுவித்து உள்ளனர்.