கன்னியாகுமரி அக் 21
குமரி மாவட்டம் மணக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெகன் வயது 38, இவர் கடல் தொழில் செய்து வந்தார். இவருக்கு வலது கை வலியின் காரணமாக மருத்துவமனைக்கு சென்று மருந்து சாப்பிட்டும் வலி குறையாமல் இருந்து வந்ததால் கடல் தொழிலுக்கு போக முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்த மன வேதனையில் இருந்தவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் வைத்திருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி ஜெனிபர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சோபனராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.