தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தில் 210-ன் விதியின் கீழ் ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் பர்கூர் தொகுதிக்குட்பட்ட 14 ஏரிகளில் 3 லட்சத்து 82 ஆயிரம் மீன்கள் விடப்பட்டது. புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட திப்பனூர் மற்றும் கெங்கிநாயக்கன்பட்டி ஏரிகளில் மீன்குஞ்சுகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ரங்கநாதன் ஆகியோர் மீன்குஞ்சுகளை விட்டனர். ஏரிகளில் மீன்கள் விடப்படுவதால் மீன்வளம் பெருகி
ஏரிப்பகுதியில் உள்ள மீனவர்களுக்கு அறுவடை காலங்களில் உதவியாக இருக்கும் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்நிகழ்வில் மீன்வளர்துதறை உதவி இயக்குநர் ரத்தினம், ஆய்வாளர் கதிர்வேல், ஆய்வாளர் பவதாரண்யா மற்றும் வருவாய்துறையினர், நீர்வள ஆதாரத்துறையினர், மற்றும் கிராம மக்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர்.