சேலம்,செப்.07
சேலம் நாலேட்ஜ் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.நாலேஜ் பொறியில் கல்லூரி அறக்கட்டளையின் செயலாளர் முனைவர் குமார் தலைமை தாங்கி மாணவர்கள் புதுமையான சிந்தனைகளால் நம் நாட்டை மேம்படுத்த அறிவுறுத்தினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சென்னையில் உள்ள மாற்றம் பவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறையின் துணைத் தலைவர் சுஜித் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் பன்னிரண்டாம் வகுப்பில் 190 கட் ஆப் மதிப்பெண்ணிற்கு மேல் பெற்று முதலாம் ஆண்டு பொறியியல் பயில சேர்க்கை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, சுமார் 10 லட்சம் கல்வி உதவித்தொகை KIOT அறக்கட்டளையால் வழங்கப்பட்டது. நாலேஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவரும் கல்லூரியின் முதல்வருமான முனைவர் சீனிவாசன் கல்லூரியின் சிறப்புகளையும் பொறியாளர்களுக்கு இருக்கும் வேலை வாய்ப்புகளை பற்றியும் உரையாற்றினார்.நாலேட்ஜ் கல்லூரி அறக்கட்டளையின் துணைத் தலைவர் முத்துசாமி, இணைச் செயலாளர் சிவபிரசாத், பொருளாளர் சுரேஷ்குமார், ஆகியோர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் நாலேட்ஜ் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் இயக்குனர்கள் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.