திருப்பூர் ஜூலை: 26
நமது பாரம்பரிய பிரசவ முறைகளில் இயற்கை முறையில் தண்ணீர்முறை சுகப்பிரசவம் (Water Birth) மிகவும் முக்கியத்துவமானது. இம்மாதிரியான தண்ணீர்முறை சுகப்பிரசவத்தை கொங்கு மண்டலத்திலேயே முதன்முதலில் திருப்பூரில் T. K. T. மில், பல்லடம் சாலையில் அமைந்துள்ள ஜெம் மருத்துவமனையின் பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர். சரவணப்பிரியா சிறப்பாக செய்து வருகிறார். கடந்த செப் 18, 2023ம் ஆண்டு ஜெம் மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர்.
சி. பழனிவேல், அவரது மனைவி திருமதி. ஜெயா பழனிவேல் மற்றும் ஜெம் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர். பிரவீன் ராஜ் தலைமையில் துவக்கிவைக்கப்பட்ட இத்தண்ணீர்முறை சுகப்பிரசவத்தின் கீழ் 15-ந்திற்கும் மேற்பட்ட பிரசவத்தை இம்மருத்துவமனை நிகழ்த்தியுள்ளது.
இதுபற்றி டாக்டர் சரவணப்பிரியா கூறுகையில், இந்த தண்ணீர்முறை சுகப்பிரசவம் பெண்களுக்கு பிரசவ வலியை குறைத்தும் சுலபமாக்கவும் செய்கிறது அதுமட்டுமின்றி பிரசவத்தின்போது குழந்தையை அமைதியாக பிறக்கவும் உதவுகிறது. மேலும் இந்த பிரசவமுறை குழந்தை பிறந்த பிறகு பெண்களை இயல்பு வாழ்க்கைக்கு மிகவிரைவில் திரும்ப எளிதாக்கி உதவுகிறது. அதுமட்டுமின்றி தண்ணீர், பிரசவ வலியை 75% குறைப்பதுமட்டுமின்றி பிரசவ நேர நீளத்தை குறைப்பதாகவும் பெண்கள் பலர்உணர்ந்துள்ளனர் என்றார். மேலும் தங்களிடம் மருத்துவ ஆலோசனையின்போது அதிகப்படியான தம்பதியினர் இந்த தண்ணீர்முறை சுகப்பிரசவம் வேண்டுமென்றே விருப்படுகின்றனர். சமீப காலமாக முதலில் அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பெற்ற தாய்மார்கள் கூட தங்கள் இரண்டாம் பிரசவம் சுகப்பிரசவமாக (Vaginal Birth After Cesarean) இருக்கவேண்டும். என்று கருதி மருத்துவ ஆலோசனையின் போது விருப்பம் தெரிவிக்கின்றனர்இது (Gentle Birth Choices) மென்மையான பிரசவத்திற்கு வழிவகுக்கின்றது. இதுபோன்ற Vaginal Birth After Cesarean சுகபிரசவத்தையும் நம் ஜெம் மருத்துவமனை நிகழ்த்தியும் காட்டியுள்ளது. என்று பெருமிதப்பட்டார்.
மேலும் திருப்பூர் ஜெம் மருத்துவமனையில் கர்பகால வகுப்புகள், உணவுமுறை கட்டுப்பாடுகள், உடற்பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதன்மூலம் உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தி பிரசவத்தின் போது பிரசவ நேரத்தையும் வலியையும் குறைப்பதே குறிக்கோளாகும். அதுமட்டுமின்றி தாய்பால் ஊட்டுவது பற்றிய விழிப்புணர்வும் குழந்தை பிறப்பதற்கு முன்பே வலியுறுத்தப்படுகிறது. இதனால் 20-திற்கும் மேலான தாய்மார்கள் பயனடைந்துள்ளனர்.