ஊட்டி.டிச.31.
கோத்தகிரியில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் சார்பில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் குருபூஜை ஊர்வலம் நடைபெற்றது. கீழ் கோத்தகிரி கெரடா மட்டம் பகுதியில் விஜயகாந் திரு உருவ படத்திற்கு குருபூஜை நடத்தி மௌன ஊர்வலம் நடத்தினர். அதன் பின்பு அக்கட்சியினர் கீழ்க்கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பாலு (எ) கனகேந்திரன் தலைமையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு அப்பகுதி விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கபட்டன. அதேபோல் கோத்தகிரி பகுதி ராம்சந்த் பேருந்து நிலைய பகுதி வரை கோத்தகிரி ஒன்றிய செயலாளர் ரவி தலைமையில் விஜயகாந்த் திருவுருவ படத்தை ஏந்தியவாறு அஞ்சலி ஊர்வலம் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியினர் பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சின்னசாமி , பேரூராட்சி பாலகிருஷ்ணன், ராஜன், பரமசிவம் , சிவாஜி, சௌந்தர், பழனி, பன்னீர்செல்வம், சிவா, மகேஸ்வரன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கீழ்கோத்தகிரி, கோத்தகிரி, ஈளாடா, சோலூர் மட்டம், கைகாட்டி , பகுதியில் வைக்கப்பட்ட விஜயகாந்த் திரு உருவப்படத்திற்கு பொதுமக்கள் பலரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.