தருமபுரி மாவட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் புதிதாக கிழக்கு மாவட்ட செயலாளர் தர்ம செல்வன்
தலைமை கழகம் அறிவித்தது. தருமபுரியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தபோது பட்டாசுகள் வெடித்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்த பேப்பர்கள் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனை பார்த்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் தண்ணீரை
ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த போக்குவரத்து பாதிப்பில் 108 ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்டு தவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த போக்குவரத்து பாதிப்பினால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இதனைத் தொடர்ந்து பெரியார், அம்பேத்கர் ஆகிய சிலைகளுக்கு தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தர்ம செல்வன் மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.