ஈரோடு டிச 26
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சக்தி திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வேளாண்மை உழவர் நலத்துறை கூட்டுறவுத்துறை பொது சுகாதாரத்துறை நகராட்சி நிருவாகம் குடிநீர் வழங்கல் துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பேரூராட்சிகள் துறை கால்நடை பராமரிப்புத்துறை வனத்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை போக்குவரத்துறை வேளாண்மை பொறியியல் துறை முதல்வரின் முகவரி உணவு பாதுகாப்புத்துறை பள்ளிகல்வித்துறை மகளிர் திட்டம் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்கண்ட துறைச்சார்ந்த முதன்மை அலுவலர்கள் மேற்கொண்ட அங்கன்வாடி மையம் ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகள் மாணவ மாணவிகளின் கல்வித் தரம் தேர்ச்சி விகிதம் பள்ளிகள் உட்கட்டமைப்பு நியாய விலை கடைகள் ஊர்புறப் நூலகங்கள் கலைஞரின் கனவு இல்லம் குடிநீர் இணைப்பு அரசு அலுவலகங்கள் சீரமைப்பு பணிகள் பல்வேறு சான்றிதழ் வழங்குதல் சாலை வசதிகள் மின்சார வசதிகள் பேருந்து வசதிகள் கால்நடை அலுவலகங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்டவை ஆய்வுகள் மேற்கொண்டது குறித்து அலுவலர்களுடன் விவாதித்தார்.
மேலும் ஆய்வுகளில் கண்டறியப்பட்ட குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 326 மனுக்களை பெற்று தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மேலும் பெருந்துறை அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியினை பார்வையிட்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தினசரி வழங்கப்படும் உணவுகளின் விவரங்களை கேட்டறிந்து மாணவர்கள் தங்கும் அறை கழிவறை மின்சார வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ரவி தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையிர் நல அலுவலர் சக்திவேல் உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.