[2:18 pm, 23/11/2024] +91 96777 06646: நீலகிரி நவ.23.
தமிழக அரசின் அனைத்து நலதிட்டங்கள், சேவைகள் தங்கு தடையின்றி மக்களுக்கு விரைந்து சென்றடைவதை உறுதி செய்ய ” உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்’ என முதல்வர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி மாதம் தோறும் மாவட்டத்தில் ஒரு வட்டத்தில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கி ஆய்வு செய்து அந்த வட்டத்தில் உள்ள கிராமப் பகுதி மக்களிடம் நேரடி கள ஆய்வு செய்து அதன் ஊடாக பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட அளவிலான அரசு அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர், அந்தந்த வட்டாட்சியர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆய்வுகள் மேற்கொண்டு நலத்திட்டங்களை மக்களுக்கு கிடைக்க நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். இத்திட்டம் வாயிலாக மாவட்ட ஆட்சியர் கோத்தகிரி பகுதியில் தங்கி உயர் அதிகாரிகளுடன் ஆய்வு பணிகள் செய்து மக்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
[2:18 pm, 23/11/2024] +91 96777 06646: இத்திட்டத்தின்படி ஒரு பகுதியாக முதலமைச்சரின் மக்கள் நலத்திட்டமான அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டத்தினை சுகாதார தன்மையுடன் தயாரித்து தங்கு தடையின்றி அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படுகிறதா? என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாவுடன் ஆய்வு செய்து கோத்தகிரி பகுதி அரசு பள்ளிகளான கோத்தகிரி அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் ஒரசோலை நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கிராமங்களில் சுகாதாரமான குடிநீர் மற்றும் ரேஷன் பொருட்கள், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மாதாந்திர மகளிர் உரிமைத்தொகை திட்டம், பள்ளி மாணவர்களின் நடைமுறை திட்டங்கள் உட்பட அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள் அரசின் மூலம் சிரமமின்றி மக்களுக்கு கிடைக்க சிறந்த திட்டமாக “உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்’ நீலகிரி மாவட்டத்தில் முதல்வரின் உத்தரவின்படி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு ஊர் மக்களின் கோரிக்கையினை ஏற்று உடனுக்குடன் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.