கன்னியாகுமரி ஆக 22
நெல்லையில் சமூக சேவகர் விருது வாங்கிய மேடையில் வைத்து ஏழை மாணவிக்கு நிதி உதவி செய்த குமரி சமூக சேவகர் ஆட்டோ சொர்ணப்பனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
குமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தை அடுத்த ஜேம்ஸ்டவுணைச் சேர்ந்தவர் சொர்ணப்பன் 50. இவர் பேரூர் திமுக துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் சமூக அக்கறையுடன் ஏழை எளியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை சமூக சேவையாக செய்து வருகிறார்.
இவரது சமூக சேவையை பாராட்டி அறக்கட்டளைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் விருது வழங்கிய கௌரவித்தனர் அந்த வகையில் இவரது சமூக சேவையை பாராட்டி கௌரவிக்கும் விதமாக தூத்துக்குடி முத்துநகர் மக்கள் எழுச்சி அறக்கட்டளை சார்பில் நெல்லையில் “தெய்வத்தின் கரங்கள்” என்னும் விருதினை நெல்லை மாவட்டம் டெபுடி கலெக்டர் ராஜசெல்வி வழங்கி கௌரவித்தார்.
விருது வாங்கிய மேடையில் வைத்து கும்பகோணம் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் ஏழை மாணவியான ரோஸ்னிக்கு நிதியுதவி வழங்கினார். இவரது இந்த சமூக சேவையை மேடையில் இருந்த அனைவரும் பாராட்டினார்.