திருப்பத்தூர்:டிச:10, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை களப்பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்திற்கு
மாவட்ட தலைவர் முரளிவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாபு அனைவரையும் வரவேற்று பேசினார். பொருளாளர் வினோத் குமார் வாழ்த்துரை வழங்கினார். இந்த உள்ளிருப்பு போராட்ட கோரிக்கைகளான: தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், களப்பணியார்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும் மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்கவும், உதவி இயக்குநர் கூடுதல் இயக்குநரின் பணிகளையும் கடமைகளையும் மண்டல துணை இயக்குநர், இணை இயக்குநர் ஆகியோர்களுக்கு மாற்று நடவடிக்கையை கைவிட வேண்டும். தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியினை பெற்று தகுதியுள்ள நில அளவர்களுக்கு பதவி உதவி உயர்வு வழங்க வேண்டும். சிறப்பு திட்டங்களில் நிலம் எடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களில் நில அளவை களப்பணியாளர்களை பதவி உயர்வு வழங்கிடவும், ஆய்வாளர் துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை கலைந்திட வேண்டும். நிர்வாகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றிப்பின் நிலுவை கோரிக்கைகள் மீது உரிய உத்தரவு வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் பூபதி, திருப்பத்தூர் கோட்ட தலைவர் பனிமலர், கோட்ட செயலாளர் மணிவண்ணன், கோட்ட பொருளாளர் மதன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.