நாகர் கோவில்- செப்- 19,
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் உயிரிழப்பு. கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் களியக்காவிளை , கொல்லங்கோடு ஆகிய சோதனை சாவடியகளில் நேற்று முதல் தமிழக சுகாதார துறை காய்ச்சல் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரம்
கேரளாவில் மீண்டும் நிஃபா காய்ச்சல் பரவி வரும் நிலையில் மலப்புறம் மாவட்டத்தில் பலியான 24 வயது இளைஞரின் 175 தொடர்புகள் கண்காணிப்பில் வைத்து தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் நேற்று முதல் களியக்காவிளை , கொல்லங்கோடு ஆகிய சோதனை சாவடிகளில் தமிழக சுகாதார துறை அதிகாரிகள் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளது.
கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தொடர்பு எண்கள், முகவரி பதிவு செய்த பின் தமிழகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இந்த சோதனை நடைபெற உள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்