சிவகங்கை:டிச:10
சிவகங்கையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் வாசிப்புகளின் அவசியம் குறித்து விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் முதல்வர் மனோஜ்சர்மா தலைமை தாங்கினார்.
பள்ளியின் நூலகர் முன்னிலை வைத்தார். விழாவில் புத்தகத்திற்கும் மனித வாழ்விற்கும் உள்ள தொடர்புகள் குறித்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் அலுவலகக் கண்காணிப்பாளர் ரமேஷ்கண்ணன் மாணவர்களுக்கு உவமைகளோடு விளக்கினார் .
இதன் பின்பு அவர்
நூலக நண்பர்கள் திட்டம் மூலம் மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டைகளை இலவசமாக வழங்கினார் . விழாவின் நிறைவில் தமிழக அரசின் சிறந்த நூல் விருதாளரும் எழுத்தாளருமான கலை நன்மணி பட்டம் பெற்ற அ. ஈஸ்வரன் மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியம் குறித்து விரிவாக பேசினார் . அப்போது அவர் குறிப்பிட்டதாவது : புத்தகங்கள் தான் மாணவர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தும் . மாணவர்கள் புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களில் வரும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் . வாசிப்பு என்பது தான் மாணவ மாணவிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் கரடு முரடான இந்த சமூகத்தில் மாணவர்கள் காந்திய வழியில் வெற்றி பெற வேண்டும் .இந்த மனித சமூகத்தை மேம்படுத்தும் பொறுப்பு மாணவர்களுக்கு தான் இருக்கிறது . எனவே வாசிப்பை மேம்படுத்துங்கள் இவ்வாறு அவர் பேசினார் . விழாவில் மாவட்ட மைய நூலகர் கனகராஜன் நூலக நண்பர்கள் திட்ட நிர்வாகிகள் ரீடு – அறக்கட்டளை நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர் .