நாகர்கோவில் நவ 25
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றாகவும், கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாகவும் விளங்குவது நாகர்கோவில் கோட்டாரில் அமைந்துள்ள கேட்ட வரம் தரும் புனித சவேரியார் பேராலயம் ஆகும். ஆண்டுதோறும் இந்த பேராலயத்தின் திருவிழா நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நிறைவுபெறும். ஆலய வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு பட்டாசுகள் வெடிக்க
இந்த ஆண்டுக்கான திருவிழா திரு கொடி ஏற்றத்துடன் நேற்று 24-ந்தேதி தொடங்கியது.
முதலாம் நாள் திருவிழா “எதிர்நோக்கு நம்பிக்கை தரும் ” என்ற தலைப்பில் நடைபெற்றது. முதலாம் நாள் திருவிழாவின் நிகழ்ச்சியாக காலை 6 15 மணிக்கு ராஜாவூர் பங்கு இறைமக்கள் சார்பில் திருப்பலியும், காலை 8 மணிக்கு அருகுவிளை பங்கு இறைமக்கள் சார்பில் திருப்பலியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட முதன்மை அருட்ப பணியாளர் பேரருள் பணி டி.ஜான் ரூபஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மறையுறை வழங்கப்பட்டது.முதல் நாள் திருவிழாவை காவல்துறையினர் சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பங்கு இறைமக்கள், பங்கு அருள் பணி பேரவை, புனித காணிக்கை அன்னை அருள் சகோதரிகள், இணை பங்கு பணியாளர் அருள்பணி எஸ். ஷாஜன் செசில், பங்கு பணியாளர் அருள்பணி வி. பஸ்காலிஸ், கோட்டாறு மறை மாவட்ட முதன்மை பணியாளர் அருள்பணி ஏ.எஸ் ஆனந்த், பங்கு பேரவை துணைத் தலைவர் ஜேசு ராஜா, துணை செயலாளர் ராஜன் ஆராய்ச்சி, பாபி பொருளாளர் ஜார்ஜ் பிரகாஷ் ராபின் மற்றும் ஏராளமான பங்கு பேரவை மக்கள், பொதுமக்கள், உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.