திண்டுக்கல் ஜோசப் கல்வி அறக்கட்டளையின் சார்பாக பொங்கல் விழாவும் ,முதியவர்களுக்கு ஆடைகள் வழங்கும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவில் அமைந்துள்ள ஜோசப் கல்வி அறக்கட்டளையின் அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஜோசப் கல்வி
அறக்கட்டளையின்
நிர்வாக இயக்குனர் பேராசிரியர் ஜோசப் வில்லியம் தலைமை தாங்கினார்.இவ்விழாவில் அறக்கட்டளையின் இணை இயக்குனர் மேரிவர்ஜீனியா மற்றும் மார்க்கெட்டிங் மேனேஜர் டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக
திண்டுக்கல் காருண்யா அறக்கட்டளையின் நிறுவனர் சமூக ஆர்வலரும், ஆசிரியருமான எஸ்.ஜெரோம்அருள் ராயன் கலந்து கொண்டு முதியவர்களுக்கு ஆடைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் ஜோசப் கல்வி அறக்கட்டளையின் திட்ட மேலாளர் கிறிஸ்டோபர் நன்றி கூறினார்.