சங்கரன்கோவில்: ஜீலை:10
தமிழகத்தில் உலகப் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா வருகின்ற 11/ 7/2024 முதல் கொடியேற்றத்துடன் துவங்கும் ஆடித்தபசு திருவிழா தொடர்ந்து 12 திருவிழாக்கள் நடைபெறகிறது பதினொன்றாம் திருநாளன்று தவசு காட்சி நடைபெறுவதை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம் எல் ஏ ஆலோசனைப்படி நடைபெற்றது கூட்ட த்தில் தென்காசி பாராளுமன்ற எம்பி டாக்டர் ராணிஸ்ரீ குமார் கலந்து கொண்டு சங்கரநாராயணர் திருக்கோவில் சங்கரலிங்க சுவாமி கோமதி அம்பிகை ஆடித்த பசு திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்து துறையினருக்கும் ஆலோசனைகளை வழங்கினார் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் நகராட்சி கமிஷனர் சபாநாயகம் பொறியாளர் இர்வின் ஜெயபால் சுகாதார அலுவல ர் வெங்கட்ராமன் மேனேஜர் செந்தில்குமார் ஆகியோ ர் ஆலோசனைகளை வழங்கினர் மேலும் கூட்டத்தில் ஆடித்தவர் திருவிழாவின்போது கீழ மாட வீதி தெற்கு மாட வீதி மேல மாட வீதி வடக்கு மாட வீதி ஆகிய இடங்களை சுத்தமாக பாதுகாக்கவும் மற்றும் பக்தர்களுக்கு குடிநீர் வழங்குதல் விழா காலங்களில் மின்சாரம் தடை இன்றி சீராக கிடைப்பதற்கு மின்வாரியத்தை கேட்டுக் கொள்ளுங்கள் கீழமாட வீதியில் விழா காலங்களில் கடைகள் வைத்து நடத்துவதை தடை செய்ய கேட்டுக்கொள்ளுதல் தவசு காட்சி நடைபெறும் தெற்கு ரத வீதியில் நகராட்சி யின் மூலம் சவுக்கு கம்புகளுடன் கூடிய பாரிகாட் வசதி செய்தல் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் லைன்ஸ் கிளப் சுழற் கழகம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரால் நிறுவப்படும் தண்ணீர் பந்தல்களுக்கு இலவசமாக நகராட்சி மூலம் குடிநீர் வழங்குதல் திருத் தேரோட்டம் நடைபெறும் நாள் 19/7/2024 அன்று அதிகாலையிலேயே ரத வீதிகளில் மண்ணை அகற்றி சுத்தம் செய்து தண்ணீர் தெளித்தல் தேரோட்டம் அன்று மருத்துவக் குழு மீட்புகுழு சேவை அளித்தல் உள்பட பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் டிராபிக் ஆகாமல் போக்குவரத்து சரி செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுதல் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் காவல்துறையினர் போக்குவரத்து காவல்துறையினர் மருத்துவத்துறையினர் மின்சாரத் துறையினர் குடிநீர் வழங்கல் துறையினர் நெடுஞ்சாலைத்துறையினர் தாலுகா நிர்வாகத்தினர் உள்பட பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர் கூட்ட ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி மாரிமுத்து ஆகியோர் கொண்ட குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.