கன்னியாகுமரி ஜூலை 22
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்திற்கான படகு சேவை கடல் நீர்மட்டம் தாழ்ந்த காரணத்தால் நேற்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகுகளில் சென்று பாா்த்து மகிழ்கின்றனா். இதற்காக தமிழக அரசு நிறுவனமான பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் காலை 8 முதல் மாலை 4 மணிவரை இடைவேளையின்றி தொடா்ச்சியாக படகுகள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், நேற்று கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் தாழ்வாக காணப்பட்டதால் விவேகானந்தா் நினைவு மண்டபத்திற்கான படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது. இதனை அடுத்து கடலில் படகுமூலம் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.