திண்டுக்கல் தலைமை அலுவலகத்தில் சமுதாய செயல்பாட்டு குழு உறுப்பினர்களுக்கான கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் திவ்யா வரவேற்புரை ஆற்றினார்.இக்கூட்டம் அமைதி அறக்கட்டளை தலைவர் பா.ரூபபாலன் தலைமையிலும், அமைதி அறக்கட்டளை மேலாளர் சீனிவாசன் கருத்துரையிலும் , திட்ட ஒருங்கிணைப்பாளர் பவித்ரா சிறப்புரையிலும் நடைபெற்றது.
30 கிராமங்களில் இருந்து சமுதாய ஆதரவு குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். கிராமங்களில் குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு , அரசு திட்டங்களில் 100 சதவீதம் மக்களை பயனடைய செய்தல் , கொத்தடிமை முறையை மாற்றி உள்ளூரில் வேலை வாய்ப்பினை உருவாக்குதலில் சமுதாய ஆதரவு குழுவின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு பற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.. மேலும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பள்ளி மேலாண்மை குழுவில் கலந்து கொண்டு எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றியும் சமுதாய ஆதரவு குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைப்பது பற்றி கூறப்பட்டது. இக்கூட்டத்தை ஒருங்கிணைப்பாளர்கள் சங்கீதா, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி மற்றும் முனியாண்டி ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்கள். இக்கூட்டத்தின் முடிவில் பணியாளர் ரேணுகாதேவி கலந்து கொண்ட சமுதாய ஆதரவு குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.