தஞ்சாவூர், செப்.26
தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் 2-ஆம் சரபோஜி 247-வது பிறந்த நாள் விழா அரண்மனை சங்கீத மகாலில் நடந்தது. . விழாவிற்கு சோழர் வரலாற்று ஆய்வுச் சங்க தலைவர் அய்யம்பேட்டை செல்வராஜ் தலைமை தாங்கினார். தஞ்சை லிட்டில் ஸ்காலர் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் சாமிநாதன் வரவேற்றார். விழாவில் மூத்த அறுவை சிகிச்சை நிபுணரும் கலைமாமணி டாக்டர் நரேந்திரன், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரண்டு பேருக்கும் மாமன்னர் சரபோஜி விருதுகளை இண்டாக் தலைவர் டாக்டர் வி.வரதராஜன் வழங்கினார். விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் (ஓய்வு) தெய்வநாயகம் பேசினார். விருது பெற்ற டாக்டர்கள் ஏற்புரை ஆற்றினார்கள். விழாவில் சரஸ்வதி மகால் நூலக நிர்வாகக்குழு உறுப்பினர் சிவாஜி ராஜா போன்ஸ்லே அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே அழகிய தஞ்சை திட்ட இயக்குநர் ஆடிட்டர் ரவிச்சந்திரன் இண்டாக் பொருளாளர் என்ஜினீ யர் முத்துக்குமார் தமிழ்நாடு மராட்டா சங்க தஞ்சை மாவட்ட தலைவர் அலெக்சாண்டர் போன்ஸ்லே மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாநகராட்சி மண்டலக் குழு தலைவர் மேத்தா நன்றி கூறினார்.