நிதிநிலை அறிக்கையில் எங்களுக்கு ஒதுக்கிய ரூ.198 கோடியை உயர் கல்வி துறை இயக்குநர் கருவூலத்திற்கு திருப்பி அனுப்பியது கொடுமையானது என்று சங்க செயலாளார் கிருஷ்ணராஜ் வேதனையுடன் தெரிவித்தார்.
சென்னை, ஜூலை-07, உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைகள் குழு
பல்கலைகழக ஆசிரியர்கள் சங்கம் அழகப்பா பல்கலை கழக ஆசிரியர்கள் சங்கம் ஆகியவை இணைந் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத அறப் போராட்டம் சென்னை மதுரை திருநெல்வேலி ஆகிய முன்று மையங்களில்நடைபெறுகிறது.
இதில் 100 க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
மேலும் செயலாளர் கிருஷ்ணராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:l-
அரசு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டடது போல் உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வினை உயர்கல்வி இயக்குநாகம் வழங்க மறுக்கிறது. 11.1. 2021 .அன்று பிறபித்த அரசாணை எண் – 5-ன்படி
நிதிநிலை அறிக்கையில் அறிவித்த படி உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு ஒதுக்கிய ரூ.198 கோடியை உயர்கல்வி இயக்குநர் அரசு கருவூலத்திற்கு திருப்பி அனுப்பியது தரம் தாழ்ந்த செயல். இவருடைய நடவடிக்கைகள் முற்றிலும் அரசின் கொள்கைக்கு விரோதமானது.
மறுபடியும் இந்த நிதியாண்ழல் எங்களுக்கான தொகையை அரசு ஒதுக்கிய பிறகும் கடந்த மூன்று மாதங்களாக உயர்க்கல்வி இயக்குநாகம் அதை நடைமுறை படுத்தாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.
ஆகவே இந்த பாராபட்ச செயலை கண்டித்தும், எங்களின் கோரிக்கைகள் உயர்கல்வித் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வருக்கும் தெரியபடுத்தும் விதமாக இந்த உண்ணவிரத போராட்டத்தை நடத்துகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும் யூ.ஜி.சி அறிவித்த எம்.பில் முடித்தவர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். அரசாணையில் அறிவித்த கல்லூரி பேராசிரியர் பதவி உயர்வினை உடனடியாக செயல் முறை படுத்த வேண்டும். இணை பேராசிரியர் பதவிக்கு பி.எச்.படி கட்டாயமில்லை என்று யூஜி.சி அறிவிப்பை ஏற்று பி.எச்.டி அல்லாதவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
பேரன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.