தேனி செப் 13:
தேனி மாவட்டம் முழுவதும் சுமார் 5000 ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது கடந்த மாதம் வரை விதைக்கான வெங்காயம் விவசாயிகளிடமிருந்து ரூபாய் 28 முதல் 35 வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் ஓரளவுக்கு விவசாயிகளுக்கு திருப்தி அடையும் விலை கிடைத்து வந்தது. இந்த நிலையில் தற்போது தொடர்ந்து சின்ன வெங்காயம் விலை சரிந்து வருவதால் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் இரண்டு கிலோ வெங்காயம் ரூபாய் 100க்கு விற்கப்பட்ட நிலையில் விதைக்கான சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 க்கு கொள்முதல் செய்து சின்ன வெங்காயம் விவசாயம் செய்து பயிரிட்டு வந்தனர் தற்போது நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள நேரத்தில் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 18 ரூபாய் மட்டுமே விலை கிடைப்பதால் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளன அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் விவசாயிகளிடமிருந்து 50 கிலோ வெங்காயம் மூடை 900 மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட்டு வியாபாரிகள் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் ஒரு ஏக்கருக்கு சுமார் சின்ன வெங்காயம் பயிரிட்டால் 55 மூடை முதல் 70 மூடைகள் வரை மட்டுமே வரும் இதற்கு விதை நடவு கூலி தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதல் செலவு கூலியாள் சம்பளம் வெங்காய சாகுபடியில் களையெடுக்கும் கூலி ஆட்கள் செலவு சம்பளம் அறுவடை கூலி சம்பளம் போன்றவை செலவினங்கள் அதிகரித்து வரும் நிலையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 18 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உழுதவன் கணக்கு பார்த்தால் கோமணம் கூட மிஞ்சாது என்ற கதையாக வேதனை தெரிவிக்கின்றனர் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்