நாகர்கோவில் ஜூன் 7
கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளில் பருவ மழை பொழிய தொடங்கியுள்ளது, கன்னியாகுமரி, விவேகானந்தபுரம், கொட்டாரம்,மயிலாடி, ஒற்றையால்விளை போன்ற பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் கன்னிப் பூ சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அதை ஒட்டிய மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி, நாகர்கோவில், மயிலாடி,சுசீந்திரம், கொட்டாரம், விவேகானந்தபுரம் போன்ற பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது கன்னிப்பூ சாகுபடி தொடங்கியுள்ள குமரி மாவட்டத்தில் ஏரிகள்,குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளதாலும் பருவமழை முன்கூட்டியே பொழிய தொடங்கி உள்ளதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.