தேனி செப் 24:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரியில் 23ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் பொன்விழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது போடிநாயக்கனூர் நகரில் குரங்கணி செல்லும் சாலையில் ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டு தற்போது 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி கல்லூரியின் பொன்விழா இன்று திங்கட்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது பொன்விழா ஆண்டு தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார் துணைத் தலைவர் ராமநாதன் செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சியில் முன்னால் தமிழக முதலமைச்சரும் போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ பன்னீர்செல்வம் பங்கேற்று கல்லூரி பொன்விழா மலரை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார் இதனைத் தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கல்லூரி குறித்தும் இன்றைய காலகட்டங்கள் குறித்தும் சிறப்புரை ஆற்றுகிறார் மேலும் கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடக்கிறது கல்லூரி முதல்வர்கள் முன்னால் முதல்வர்கள் பேராசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் முன்னால் மாணவர்கள் ஆகியோரை கௌரவித்து பாராட்டு விழா நடைபெறுகிறது நிகழ்ச்சியின் இறுதியில் கல்லூரி வரலாற்று துறை தலைவர் ஞானசேகரன் நன்றி கூறுகிறார் விழாவின் இரண்டாம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று ஏலக்காய் விவசாயிகள் சங்க உறுப்பினர்களின் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது இதனை தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது விழாவின் மூன்றாம் நாளான புதன்கிழமை கல்லூரி தேசிய மாணவர் படையின் மரியாதை அணிவகுப்பு நடைபெறுகிறது அன்றைய தினம் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்லூரி ஆண்டு நுழைவாயிலை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார் இதை யடுத்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும் ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் ஐ பெரியசாமி பங்கேற்று கல்லூரி பொன் விழா அஞ்சல் தலையை வெளியிடுகிறார் இதனை தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெற்றுக் கொள்கிறார் இந்த விழாவில் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் தேனி மாவட்ட எம்எல்ஏக்கள் கம்பம் என் ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி ஆ மகாராஜன் பெரியகுளம் கே எஸ் சரவணகுமார் மதுரை மண்டல கல்லூரி இயக்குனர் குணசேகரன் மதுரை காமராஜர் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன் போடி முன்னாள் எம்எல்ஏக்கள் லட்சுமணன் சுருளி வேல் நகர் மன்ற தலைவர்கள் போடி ராஜராஜேஸ்வரி சங்கர் கம்பம் வனிதா நெப்போலியன் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் சின்னமனூர் அய்யம்மாள் ராமு தேனி ரேணு ப்பிரியா பாலமுருகன் கூடலூர் பத்மாவதி லோகந் துரை மற்றும் போடி நகராட்சி நகரமன்ற உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எம் சங்கர் போடி திமுக நகர செயலாளர் ஆர் புருஷோத்தமன் நகர பிரமுகர்கள் தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் கல்லூரி 50 ஆண்டு பொன் விழா குறித்து வாழ்த்தி பேசுகிறார்கள் நிறைவில் கல்லூரி முதல்வர் முனைவர் டாக்டர் சிவக்குமார் நன்றி உரையாற்றுகிறார் கல்லூரி பொன்விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக குழுவினர் வெகு சிறப்பாக செய்து வருகின்றனர்