நாகர்கோவில் ஜூன் 19
அஞ்சலங்களில் விவசாயிகளுக்கான ரூபாய் 2000 உதவித்தொகை பெறுவதற்கான முகாம் ஜூன் 20ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து
கன்னியாகுமரி கோட்டக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது :- பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயனாளிகளுக்கு வரவு வைக்கப்பட்டுள்ள 17 வது தவணையான ரூபாய் 2000 உதவித்தொகை அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் வசதியை பயன்படுத்தி கட்டணம் இன்றி எடுத்துக் கொள்ளலாம். பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் இணைக்கப்பட்டுள்ள எந்த ஒரு வங்கி கணக்கில் இருந்தும் அருகில் உள்ள அஞ்சலகங்கள் தபால்காரர்கள் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மூலமாக கட்டணம் இன்றி ரூபாய் 10 ஆயிரம் வரை பெற்றுக் கொள்ளலாம் இதற்காக ஜூன் 30-ம் தேதி வரை அஞ்சலகங்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதே போல் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் மூலம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டப் பயனாளிகள் முதியோர் உதவித்தொகை ஓய்வூதியம் மகளிர் உரிமைத்தொகை உட்பட பல்வேறு மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட பயனாளிகள் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து கட்டணம் இன்றி பணம் எடுத்துக் கொள்ளலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.