நீலகிரி. நவ.16
நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை உற்பத்தி உள்ளது சுமார் 65 ஆயிரம் சிறு குறு விவசாயிகள் தேயிலையை தனியார் தொழிற்சாலை மற்றும் கூட்டுறவு தொழிற்சாலைகளில் செலுத்தி வருகின்றனர். தேயிலை வாரியம் ரூ. 24 .59ஆக விலை நிர்ணயம் செய்துள்ள நிலையில் ஒவ்வொரு தனியார் தொழிற்சாலையும் இதற்கு மாறாக விலை குறைத்து வழங்கப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். குன்னூர் எடக்காடு பகுதியில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது இதில் இணை இயக்குனர் கணபதி கலந்து கொண்டார் இக்கூட்டம் வாயிலாக அனைத்து தேயிலை தொழிற்சாலைகளிலும் விவசாயிகளின் கோரிக்கை படி தேயிலை வாரியம் அறிவித்த நிர்ணய விலையை விவசாயிகளுக்கு கொள்முதல் விலையாக வழங்க வேண்டும் என தேயிலை வாரிய இணை இயக்குனர் கேட்டுக் கொண்டார்.