திருவாரூர்
மார்ச் 27
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
26.03.2025 அன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1235 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 1003 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
2024-25-ஆம் ஆண்டில் குறுவை பருவத்தில் 36,920 ஹெக்டேரிலும், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 1,53,800 ஹெக்டேரிலும், கோடை சாகுபடி 9,750 ஹெக்டேரிலும் ஆக மொத்தம் 2,00,470 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இதில் இதுவரை இயல்பான முறையில் 5536 ஹெக்டேர் திருந்திய நெல் சாகுபடி முறையில் 25416 ஹெக்டேரும், நேரடி விதைப்பு முறையில் 9010 ஹெக்டேரும் ஆக மொத்தம் 39962 ஹெக்டேர் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நிறைவடைந்துள்ளது. சம்பாஃதாளடி சாகுபடி 153800 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை சம்பா இயல்பான முறையில் 17555 ஹெக்டேரும், திருந்திய நெல் சாகுபடி முறையில் 30,745 ஹெக்டேரும், நேரடி விதைப்பு முறையில் 56,239 ஹெக்டேரும் ஆக மொத்தம் 104539 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு முழுவதும் அறுவடை முடிந்துவிட்டது. தாளடி, இயல்பான முறையில் 6460 ஹெக்டேரும், திருந்திய நெல் சாகுபடி முறையில் 22965 ஹெக்டேரும், நேரடி விதைப்பு முறையில் 9971 ஹெக்டேரும் ஆக மொத்தம் 39,396 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு இதில் 39,396 ஹெக்டேரும் அறுவடை நிறைவடைந்துள்ளது. மொத்த சம்பா ஃ தாளடி பரப்பாகிய 1,43,935 எக்டேரில், இதுவரை 1,43,965 ஹெக்டேரும்; அறுவடை செய்யப்பட்டது.
2024-2025ஆம் ஆண்டில் உளுந்து 36,700 ஹெக்டேரிலும், பச்சைப்பயறு 50,000 ஹெக்டேரிலும்; ஆக மொத்தம் 86,700 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், காரீப் பருவத்தில் 1236 ஹெக்டேரில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வரப்பு உளுந்து 1486.4 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் தரிசு பருவத்தில் உளுந்து 3028 எக்டேரிலும், பச்சைப் பயறு 23,003 எக்டேரிலும், சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
2024-2025ஆம் ஆண்டில் நிலக்கடலை 3,080 ஹெக்டேரிலும், எள் 2,016 ஹெக்டேரிலும் ஆக மொத்தம் 5,150 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் 2637 ஹெக்டேர் நிலக்கடலை சாகுபடியும், 22,317 ஹெக்டேரில் எள் சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2024-2025ஆம் ஆண்டில் பருத்தி 14,000 ஹெக்டேரிலும், கரும்பு 120 ஹெக்டேரிலும் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 10509 ஹெக்டேரில் பருத்தியும், 194 ஹெக்டேரில் கரும்பும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2024-2025-ஆம் ஆண்டு 63,169 விவசாயிகளுக்கு ரூ.477.34 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மண்டலத்தில் நடப்பு காரீப் 2024-2025 குறுவை பருவத்தில் 173 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இதுவரை சுமார் 93,986 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 21,140 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ராபி பருவத்தில் 538 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 5,06,352 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,28,195 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில், நடப்பாண்டில் நெல் தரிசில் பயறு வகை பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 21989.8 எக்டேர் பரப்பிற்கு 14802 விவசாயிகள் பிரீமியத் தொகை செலுத்தியுள்ளனர். எள் பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய கடைசி தேதி 17.03.2025 ஆகும். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய எக்;டேர் ஒன்றிற்கு ரூ.529.815 பிரீமியத் தொகை செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்துடன் 14,277 விவசாயிகள்ல், 21,704.96 எக்டேருக்கு பதிவு செய்துள்ளனர். நெல் தரிசில் பருத்தி பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய கடைசி தேதி 31.03.2025 ஆகும். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய எக்;டேர் ஒன்றிற்கு தொகை ரூ.2037.55 பிரிமீயத் தொகை செலுத்த வேண்டும். இதுவரை 1,088 விவசாயிகள், 5,586.3473 எக்டேருக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில், விவசாயிகளின் நில உடைமைப் பதிவுகள் சரிபார்த்தல் முகாம் அனைத்து 555 வருவாய் கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்கள் நில உடைமைப் பதிவுகளை சரிபார்க்க ஒரு பொன்னான வாய்ப்பு. எனவே, விவசாய பெருமக்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் அட்டை, நிலப்பட்டா மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசியினை எடுத்துக் கொண்டு முகாமிற்கு சென்று தங்களுடைய நிலப் பதிவுகளை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 85,095 விவசாயிகள் பதிவு செய்ய இலக்கு பெறப்பட்டு, இதுவரை 40,964 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். பயனாளிகளில் 39,223 விவசாயிகள் பதிவு செய்ய இலக்கு பெறப்பட்டு, இதுவரை 27,139 விவசாயிகள் பதிவு செய்துள்ளார்கள். இத்திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற, 31.03.2025-க்குள் விவசாயிகள் தங்கள் நில உடமைகளைப் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், தமிழக முதலமைச்சர் அவர்களின் “மண்ணூயிர் காத்து மன்னூயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் 50ஃ- மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் 91.8 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் 41.5 மெ.டன் வரவு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் மண்புழு உரம் தயாரித்தல் மையம், இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல் மையம், மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிக்கும் திட்டம், வேளாண் காடுகள் திட்டத்தின் வாயிலாக வேப்பமரங்கள் நடுதலை ஊக்குவித்தல், உயிரி பூச்சிக் கொல்லி பண்புடைய தாவரங்களை வளர்த்தெடுப்பதற்கான ஆடாதொடை, நொச்சி நடவுப் பொருட்கள் வழங்குதல், அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க வட்டார வாரியாக ஒரு கிராமத்தில் அங்கக வேளாண்மைக்காக மாதிரிப் பண்ணைகள் உருவாக்குதல் ஆகியத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இத்திட்டத்தில் பயன்பெற தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வரப்புகளில் பயறு வகை பயிர் சாகுபடி இனத்தின் கீழ் 3,800 எக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 3,762 எக்டேர் பரப்பிற்கு உளுந்து விதை வழங்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செயல் விளக்கம் இனத்தின் கீழ் 2,175 எக்ே;டர் இலக்கு பெறப்பட்டு இதுவரை 2,088 எக்டேருக்கு இடுபொருள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மின்கலம்ஃஇயந்திர தூவான் இனத்தின் கீழ் 518 எண்கள் இலக்கு பெறப்பட்டு இதுவரை 485 தெளிப்பான்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
உணவு மற்றும் ஊட்டச்சத்து – பயறு வகை திட்டத்தின் கீழ் உளுந்து, பச்சைப் பயறு மற்றும் துவரையில் செயல் விளக்கங்களும், விதைகள் 50 சதவீதம் மானியத்திலும், விதைகள் உற்பத்தி மானியமும், நுண்ணூட்ட சத்து உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள,; இயற்கை உரங்கள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படவுள்ளன. நெல் தரிசில் பயறு வகை சாகுபடி திட்டத்தின் கீழ் செயல் விளக்கங்களும், பயறு வகை விதைகள் 50 சதவீத மானியத்திலும், நுண்ணூட்டஉரம், சிப்சம், உயிர் உரங்களும், பயிர் பாதுகாப்பு மருந்துகள் 50 சதவீத மானியத்திலும், பயறு வகை விதைகள் உர மானியமும் வழங்கப்படவுள்ளன. மேற்குறிப்பிடபட்டுள்ள பயறுவகை பயிர் திட்டத்தின் கீழ் பயன்பெற தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, முதுநிலை மண்டல மேலாளர் (நுகர்பொருள்) புஹாரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, வருவாய் கோட்டாட்சியர்கள் சௌம்யா (திருவாரூர்), யோகேஸ்வரன் (மன்னார்குடி), வேளாண்மைதுறை இணை இயக்குநர் .பாலசரஸ்வதி, செயற்பொறியாளர் (வெண்ணாறு வடிநில கோட்டம்) ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.