திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ, தலைமையில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் 2024 நவம்பர் மாத இயல்பான மழையளவு 1230.2 மி.மீ. ஆகும் நடப்பாண்டில் நவம்பர் மாதத்தில் 1004.554 மி.மீ. மழை பெறப்பட்டது.
அந்த வகையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.87 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4427 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 1603 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
2024-25-ஆம் ஆண்டில் குறுவை பருவத்தில் 36,920 ஹெக்டேரிலும் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 1,53,800 ஹெக்டேரிலும் கோடை சாகுபடி 9,750 ஹெக்டேரிலும் ஆக மொத்தம் 2,00,470 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,
இதில் இதுவரை இயல்பான முறையில் 5536 ஹெக்டேர் திருந்திய நெல் சாகுபடி முறையில் 25416 ஹெக்டேரும், நேரடி விதைப்பு முறையில் 9010 ஹெக்டேரும் ஆக மொத்தம் 39962. ஹெக்டேர் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா சாகுபடி 153800 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை இயல்பான முறையில் 16158 ஹெக்டேரும், திருந்திய நெல் சாகுபடி முறையில் 26,953 ஹெக்டேரும், நேரடி விதைப்பு முறையில் 62745 ஹெக்டேரும் ஆக மொத்தம் 105856 ஹெக்டேர் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தாளடி, இயல்பான முறையில் 9159 ஹெக்டேரும் திருந்திய நெல் சாகுபடி முறையில் 20496 ஹெக்டேரும் நேரடி விதைப்பு முறையில் 7532 ஹெக்டேரும் ஆக மொத்தம் 37,187 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
2024-2025ஆம் ஆண்டில் உளுந்து 36,700 ஹெக்டேரிலும் பச்சைப்பயறு 50,000 ஹெக்டேரிலும் ஆக மொத்தம் 86,700 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் காரீப் பருவத்தில் 1324 ஹெக்டேரில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 2024-2025ஆம் ஆண்டில் நிலக்கடலை 2,800 ஹெக்டேரிலும், எள் 1,600 ஹெக்டேரிலும் ஆக மொத்தம் 4,400 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் 397 ஹெக்டேரில் நிலக்கடலை சாகுபடியும் 566 ஹெக்டேரில் எள் சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2024-2025ஆம் ஆண்டில் பருத்தி 14,000 ஹெக்டேரிலும் கரும்பு 120 ஹெக்டேரிலும் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 70 ஹெக்டேரில் பருத்தியும், 17 ஹெக்டேரில் கரும்பும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2024-2025-ஆம் ஆண்டு 43,625 விவசாயிகளுக்கு ரூ.322.23 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மண்டலத்தில் நடப்பு காரீப் 2024-2025 குறுவை பருவத்தில் 173 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இதுவரை சுமார் 93,105 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 36,920 எக்டேரில் குறுவை சாகுபடி செய்திட இலக்கு பெறப்பட்டு, 39,962 எக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கு குறுவை பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டு இம்மாவட்டத்தில் 13,107 விவசாயிகள் 20211.81 எக்டேர் பரப்பிற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். நடப்பாண்டிற்கு, சம்பா மற்றும் தாளடி நெற்பயிருக்கு (நெல்-ஐஐ) பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய 30.11.2024 கடைசி நாளாகும் இதற்கான பயிர் காப்பீட்டுத் தொகை ரூ. 36,500 ஏக்கராகும். ஒரு ஏக்கருக்கு தொகை ரூ.547.50- பிரிமீயம் செலுத்தி விவசாயிகள் பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுவரை நெல்-ஐஐ பயிர் காப்பீடு 25,862 விவசாயிகள் 7379.53 எக்டேருக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் தமிழக முதலமைச்சர் அவர்களின் “மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 50- மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் 91.8 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன், முதுநிலை மண்டல மேலாளர் (நுகர்பொருள்) புஹாரி, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்.சித்ரா, வேளாண்மை துறை இணை இயக்குநர். பாலசரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா உள்ளிட்ட அரசு உயர்அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.