இராமநாதபுரம் ஜூன் 26-
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது..
விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணுசந்திரன், செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.