நாகர்கோவில் – ஜூலை – 27,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு நாம் தமிழர் கட்சியின் பத்மநாபபுரம்- குமரி மாவட்ட உழவர் பாசறை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து நாம் தமிழர் கட்சி சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் பின்வருமாறு
குமரி மாவட்டத்திற்கு அரணாக விளங்கும், மழை பொழிவிக்கும் மலைகளை உடைத்து கேரளாவிற்கு கடத்துவதை முற்றிலுமாக தடுக்க கோரியும்,
முறைகேடாக இயங்கும் குவாரிகளை உரிய ஆய்வு செய்து முறைகேடுகளுக்கு தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும்,
விவசாயத்துறை மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து தாலுகா வாரியாக பனை மற்றும் தென்னை மரம் ஏற பயிற்சி கொடுக்க வேண்டியும்,
நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கி வேளாண்மை செய்ய ஏதுவாக நீர்நிலைகளை தூர்வாரி சுத்தப்படுத்தி நீர்த்தேக்கங்களை பராமரிக்க கோரியும்,
குமரி மாவட்டத்தின் முக்கியமான சந்தையாகிய மார்த்தாண்டம் சந்தையை விரைந்து சீரமைத்து சந்தையின் அனைத்து பகுதிகளிலும் எல்.இ.டி விளக்குகள் அமைத்து, கழிவறையை சீரமைத்து, மீன் சந்தை மற்றும் உழவர் சந்தையை மேம்படுத்தி, கழிவுகளை முறையாக அகற்றக் கோரியும்
நாம் தமிழர் கட்சியின் பத்மநாபபுரம் – குமரி மாவட்ட உழவர் பாசறை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.