நாகர்கோவில் ஜூன் 15
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆண்டுக்கு இரண்டு நெல் சாகுபடி முறைகள் உள்ளன கன்னி பூ என்று அழைக்கப்படும் ஆண்டின் முதல் பருவ சாகுபடி பணிகள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இறுதியில் தொடங்கும் இந்த காலகட்டத்தில் தான் தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கும் அந்தவகையில் கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது – அதன் அடிப்படையில் அதை ஒட்டி உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் கேரளாவை போன்றே தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவீரம் அடைந்து உள்ளது – இதனால் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் முதல் பருவ நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவீரமாக ஈடுபட்டு வருகின்றனர். நெல் வயல்களில் டிராக்டர் கொண்டு நிலங்களை உழுது பக்குவப்படுத்தும் பணிகளில் இறங்கி உள்ளனர். மாவட்டம் முழுவதும் சுமார் 7,000 ஹேக்டேர் மேல் உள்ள நெல் வயல்களிலும் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. பருவமழை தொடர்ந்து இடைவீடாது பெய்து வருவதால் 2000 மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் போதுமான அளவில் இருப்பதால் அதிக மகசூல் கிடைக்கும் என விவசாய்கள் நம்பிக்கையேடு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.