மண்டைக்காடு, பிப்- 6
மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (67). விவசாய தொழிலாளி. நேற்று மாலை தனது பைக்கில் மணவாளக்குறிச்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். ஏவிஎம் கால்வாய் சந்திப்பில் பைக்கை திருப்பி சாலையை கடக்க முயற்சித்தார். அப்போது குளச்சல் இருந்து மணவாளக்குறிச்சி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத பைக் ஒன்று ராஜரத்தினம் பைக் மீது மோதி விட்டு நிற்க்காமல் சென்று விட்டது.
இதில் படுகாயம் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ராஜரத்தினத்தை அப்பகுதியினர் மீட்டு மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விவசாயின் மீது மோதி விட்டு நற்காமல் சென்ற மர்ம பைக் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.