தஞ்சாவூர் நவ.27.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வு த்துறை சார்பில் மாவட்ட குடும்ப நல செயலகம், உலக வாசக்கடமி இரு வார விழாவை முன்னிட்டு ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை விழிப்புணர்வு வாகனத் தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
பின்னர் அவர் கூறியதாவது:
ஆண்களுக்கான நவீன தழும்பு இல்லாத குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை ,கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனை, அனைத்து அரசு மருத்துவ மனைகள் மற்றும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பாக நடைபெற உள்ளது.
குடும்ப நல சிகிச்சை செய்து கொள்ள விரும்பும் தகுதியான ஆண்கள் இந்த முகாமிற்கு வந்து சிகிச்சை செய்து கொள்ளலாம். சிகிச்சை முடிந்தவுடன் ஈட்டுத் தொகையாக ரூபாய்1,100 ம் நன்கொடையாளர் மூலம் பரிசு பொருட்களும், அழைத்து வருபவர் களுக்கு ஊக்க தொகையாக ரூபாய் 200 வழங்கப்படுகிறது.
தகுதி வாய்ந்த தம்பதியரில் பெண்களுக்கு இதய நோய் ,சர்க்கரை நோய் ,ரத்த கொதிப்பு, இரத்த சோகை, தைராய்டு பாதிப்பு அல்லது வேறு ஏதாவது காரணங் களால் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்ய இயலவில்லை என்ற நிலைமையை ஏற்பட்டால் ஆண்கள் தாமாகவே முன் வந்து இந்த எளிய சிகிச்சையை செய்து கொண்டு மனைவியின் சுமையை குறைத்து விடலாம் .இவ்வாறு அவர் கூறினார்
நிகழ்ச்சியில் மருத்துவம் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத் துணை இயக்குனர் அன்பழகன் மாவட்ட விரிவாக்க கல்வியாளர் கோடீஸ்வரன் ,மாவட்ட புள்ளியியல் உதவியாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.