தக்கலை, டிச- 11
தக்கலை அருகே உள்ள பாறைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பாபு (51), கட்டிடத் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனை மனைவி கலா கண்டித்துள்ளார். இதன் காரணமாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களும் முன்பு பாபு மது குடித்து வந்த போது ரோந்து போலீசார் தடுத்து விசாரித்தார்களாம். இது தொடர்பாக கலாவுக்கும் பாபுவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன வேதனை அடைந்த பாபு நேற்று (10-ம் தேதி) காலை வீட்டில் தூக்கில் தொங்கினார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாபுவை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் பாபு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.