ஊத்தங்கரை பகுதியில் அதிகரித்து வரும் போலி மருத்துவர்களை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதிகளில் மெடிக்கல் வைத்துக் கொண்டு மருத்துவம் பார்க்கும் நபர்களால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது, கடந்த சில தினங்களுக்கு முன் கிருஷ்ணகிரியில் இது போன்ற தவறான மருத்துவத்தால் கல்லூரி மாணவி இறப்பு செய்தி தொடர்ந்து ஊத்தங்கரை பகுதியில் மெடிக்கல் என்ற பெயரில் டாக்டர்கள் பட்டம் படித்த பெயர் பலகைகள் வைத்துக் கொண்டு இவர்களே ஊசி மற்றும் குளுக்கோஸ் என மருத்துவரின் ஆலோசனை மற்றும் மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரைகள் வழங்கி தவறான சிகிச்சை அளிப்பதால், உடல்நிலை சரி செய்ய வரும் பொதுமக்கள் உயிரிழக்க நேரிடுகிறது, இதுதொடர்பாக அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்தால் பெயர் பலகை காட்டி முறையாக மருத்துவரை வைத்துதான் மருத்துவம் பார்த்து வருகிறோம் என மழுப்பி விடுகின்றனர், ஊத்தங்கரையில் தவறான சிகிச்சியால் ஏற்படும் மரணங்களை தடுக்க மாவட்ட ஆட்சியரும் மாவட்ட இணை இயக்குனரும் உடனடியாக ஊத்தங்கரை பகுதியிலும் குறிப்பாக மகனூர்பட்டி, பெரிய தள்ளப்பாடி, பாம்பாறு அணை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் ஆய்வு மேற்கொண்டு போலி மருத்துவம் பார்க்கும் மெடிக்கல் உரிமையாளர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்